வியாபாரிகள் சாலை மறியல்


வியாபாரிகள் சாலை மறியல்
x

வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி பெரிய கடை வீதியில் சாலை வழியாக பல ஆண்டுகளாக ஒரு வழி பாதையாக உள்ளது. நகருக்குள் வரும் வாகனங்கள் மட்டும் இந்த சாலையில் அனுமதிக்கப்படும். அறந்தாங்கி பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்கள் மற்றும் கார்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் பழைய ஆஸ்பத்திரி சாலை, பெரியபள்ளிவாசல், கோட்டை சிவன்கோவில் வழியாக சோதனை சாவடியை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பெரிய கடை வீதி சாலையில் இருபுறமும் வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வணிகர்கள், வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அறந்தாங்கி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story