தக்காளி விலை குறைந்தது


தக்காளி  விலை குறைந்தது
x

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்தது. கிலோ ரூ.60-க்கு ஏலம் போனது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்தது. கிலோ ரூ.60-க்கு ஏலம் போனது.

காய்கறி சந்தை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சீசன் முடிவுக்கு வந்து உள்ளது. இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு ஒரு சில பகுதிகளில் இருந்து மட்டுமே தக்காளி கொண்டு வரப்படுகிறது. இது தவிர ஆந்திராவில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

இதற்கிடையில் கடந்த 23-ந் தேதி கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.86-க்கு ஏலம் போனது. இன்று நடைபெற்ற ஏலத்தில் திடீரென கடந்த வாரத்தை விட ரூ.26 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு ஏலம் போனது.

இல்லத்தரசிகள் நிம்மதி

மேலும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.80 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது. தற்போது தக்காளி விலை திடீரென குறைந்து உள்ளதால், இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தக்காளி சீசன் இல்லாத நிலையிலும், விலை குறைந்து உள்ளது. மேலும் தக்காளி விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story