மதுரையில் இன்று நடக்கிறது - 12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு- பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்


மதுரையில் இன்று நடக்கிறது - 12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு- பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்
x

மதுரையில் 12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை


மதுரையில் 12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் தேர்வு

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆண்-பெண்) பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது. காலை 10 மணி முதல் 12.40 மணி வரை இந்த தேர்வு நடக்கிறது. மதுரை நகர் பகுதியில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி, வேலம்மாள் கல்லூரி உள்ளிட்ட 12 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் இந்த தேர்வை, 11 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் திருநங்கைகள்.

மதுரையில் நடைபெறும் காவலர் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் செய்து வருகின்றனர். நகரின் அனைத்து தேர்வு மையங்களிலும், 1,200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அனுமதி சீட்டு

இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தினை மாற்றம் ஏதும் செய்ய இயலாது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கொண்டுவராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்.

நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, நுழைவுசீட்டு தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு, தேர்வு முடிந்த பிறகு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.


Next Story