திருவாரூர் மாவட்ட வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு


திருவாரூர் மாவட்ட வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 11 July 2023 1:00 AM IST (Updated: 11 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 208 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து ரூ.6 லட்சம் பரிசுத்தொகை மற்றும் கேடயம் வென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story