திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா - 16 வகையான திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்..!


திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா - 16 வகையான திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்..!
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில், கந்த சஷ்டி திருவிழாவின் 2வது நாளான இன்று சுப்பிரமணிய சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், மஞ்சள், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சி 6-ம் நாளான வருகிற 30-ந் தேி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கடற்கரையில் நடக்கிறது.

31-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடக்கின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்து வருகின்றனர்.


Next Story