ஓசூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூரில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாருதி நகரில் உள்ள ஸ்ரீ, முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி கொடிமர பூஜை, காப்பு கட்டுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று, ராஜ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, ஓசூர் கோட்டை மாரியம்மன், கோவிலில் இருந்து பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து, நடனம் ஆடி பூ கரகம், பச்சை கரகம், பால் கரகம், எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர். தொடர்ந்து, மாலையில் நடந்த திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story