வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு அம்பாள் தபசு மண்டபம் செல்லுதல், மாலை 6 மணிக்கு சுவாமி காட்சி அருளுதல், 8 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story