வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் நகை, பணம் திருட்டு
பாலக்கரையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலக்கரையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை-பணம் திருட்டு
திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). இவர் உய்யகொண்டான் திருமலையில் உள்ள தனது உறவினர் வீட்டு கிரகபிரவேசம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். பின்னர் மாலை வந்து பார்த்த போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 30 கிராம் நகைகள், ரூ.5 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள் என்று ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். பட்டப்பகலில் துணிகரமாக நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.