'இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு உலகமே ஆச்சரியப்படுகிறது' - நிர்மலா சீதாராமன்


இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு உலகமே ஆச்சரியப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
x

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் முழுமையான வளர்ச்சியை அடைந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

திருச்சி,

இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கி வருவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு தரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பார்த்து உலகமே ஆச்சரியப்படுகிறது. டிஜிட்டல் பொருளாதாரம் என்றாலே அது அமெரிக்காவோ, இங்கிலாந்தோ அல்லது ஜெர்மனியோ என்றுதான் நம் நாட்டு மக்களே நினைக்கிறார்கள்.

ஆனால் அவ்வாறு இல்லை. டிஜிட்டல் முறையில் பொருளாதாரம் முழுமையான மாற்றத்தை அடைந்திருப்பது இந்தியாவில்தான். 10 ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பாமர மக்களும் பயன்படுத்தும் வகையில் நாம் கொண்டு சேர்த்திருப்பது உலகத்தையே ஆச்சரியப்பட வைக்கிறது."

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.




Next Story