தொழிலாளி அடித்துக்கொலை


தொழிலாளி அடித்துக்கொலை
x

நாங்குநேரி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கூலி தொழிலாளி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சி ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 44). கூலி தொழிலாளி. இவருடைய மகன் மாரியப்பன் (20). அதே பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் ராஜா (23).

கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் வைத்து ராஜாவை மாரியப்பன் கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

அடித்துக்கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் செல்லையா அப்பகுதியில் உள்ள தனது சகோதரி பேச்சித்தாயின் வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ராஜா, மாரியப்பன் மீதுள்ள ஆத்திரத்தில் அவருடைய தந்தை செல்லையாவை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த செல்லையாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார். நாங்குநேரி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story