திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் முனியய்யா (வயது 60). இவர் திண்டுக்கல் அருகே பொன்மாந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி, கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று முனியய்யா வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் பள்ளப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து முனியய்யா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் முனியய்யா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story