பெட்ரோலுடன் வந்து தற்கொலைக்கு முயன்ற பெண்


பெட்ரோலுடன் வந்து தற்கொலைக்கு முயன்ற பெண்
x
தினத்தந்தி 18 July 2023 1:30 AM IST (Updated: 18 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலுடன் வந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தேனி

கண்டமனூர் அருகே ராஜேந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் மனைவி சித்ரா (வயது 33). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர் ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்து வந்தார். அதை அவர் தன் மீது ஊற்ற முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், "எனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் அவர் இறந்துவிட்டார். இந்தநிலையில் கணவரின் சொத்துகளை அவருடைய உறவினர்கள் அபகரிக்க முயற்சிக்கின்றனர்" என்றார். மேலும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்ததாக தெரிய வந்ததால், அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story