தீக்காயமடைந்த பெண் சாவு
தீக்காயமடைந்த பெண் இறந்தார்.
புதுக்கோட்டை
அரிமளம் அருகே கே.புதுப்பட்டி கொங்கன் தெருவை சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி சரண்யா (வயது 31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜீவ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமடைந்த சரண்யா கடந்த மாதம் 30-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் தீக்காயமடைந்த சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story