வாகன உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்


வாகன உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 4 Feb 2023 1:23 AM IST (Updated: 4 Feb 2023 3:57 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் சாகச வீடியோ வைரலான சம்பவத்தை தொடர்ந்து வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி

மோட்டார் சைக்கிள் சாகச வீடியோ வைரலான சம்பவத்தை தொடர்ந்து வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சாகசம்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே மோட்டார் சைக்கிளில் 3 இளைஞர்கள் அமர்ந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார். உடனே மோட்டார் சைக்கிள் சாகச வீடியோ காட்சியில் இடம் பெற்று இருந்த அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிள், திருச்சி இ.பி.ரோடு தேவதானம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரித்தபோது, கடந்த 6 மாதத்துக்கு முன்பே அந்த மோட்டார் சைக்கிளை அவர் விற்பனை செய்ததும், தற்போது அந்த மோட்டார் சைக்கிளை முத்தரசநல்லூரை சேர்ந்த ஒருவர் வைத்து இருந்ததும் தெரியவந்தது.

அபராதம்

இதையடுத்து அங்கு சென்ற கோட்டை போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் மோட்டார் சைக்கிள் வைத்திருந்தவரிடம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.


Next Story