டயர் வெடித்து குளத்துக்குள் பாய்ந்த காரால் பரபரப்பு


டயர் வெடித்து குளத்துக்குள் பாய்ந்த காரால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jun 2022 4:43 PM IST (Updated: 11 Jun 2022 4:52 PM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் அருகே டயர் வெடித்து குளத்துக்குள் பாய்ந்த காரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தென்காசி


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து முக்கூடல் வழியாக சுத்தமல்லிக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த கார் ஹரிராம் நகர் அருகே வந்த போது டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், முக்கூடலில் உள்ள கோரங்குளத்திற்குள் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்து குறித்து தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.


Next Story