2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மாவட்டத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
மாவட்டத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கைது
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 21). இவர் கஞ்சா விற்ற வழக்கில் களக்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் சேரன்மாதேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியை சேர்ந்தவர் முப்பிடாதி என்ற மருமகன் (24). இவர் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் சுத்தமல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குண்டர் சட்டம்
இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று சுரேஷ் உள்ளிட்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து சுரேஷ் உள்ளிட்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் (களக்காடு), ஜீன் குமார் (சுத்தமல்லி) ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர்.