சாலையை மறித்து கடை போடும் போராட்டம்


சாலையை மறித்து கடை போடும் போராட்டம்
x

மாநகராட்சியை கண்டித்து சாலையை மறித்து கடை போடும் போராட்டம் நடத்தப்போவதாக காந்திமார்க்கெட் சில்லறை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி

மாநகராட்சியை கண்டித்து சாலையை மறித்து கடை போடும் போராட்டம் நடத்தப்போவதாக காந்திமார்க்கெட் சில்லறை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வியாபாரிகள் சங்க கூட்டம்

திருச்சி காந்திமார்க்கெட் சில்லறை வியாபாரிகள் சங்க அவசர கூட்டம் நேற்றுகாந்திமார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. சங்க தலைவர்ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா முடிந்ததும் காந்திமார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் போடப்பட்ட தற்காலிக கடைகள் அப்புறப்படுத்தப்படாததால் காந்திமார்க்கெட்டில் கடை வைத்து பிழைப்பு நடத்தும் சில்லறை காய்கறி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காந்திமார்க்கெட்டுக்குள் காய்கறி வாங்க வரும் பொதுமக்களின் வாகனங்களுக்கு வரிவசூல் செய்வதால் காய்கறிகள் வாங்க வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனவே காந்திமார்க்கெட்டை சுற்றிலும் உள்ள தள்ளுவண்டி மற்றும் தற்காலிக கடைகளை அப்புறப்படுத்தக்கோரி மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடை போடும் போராட்டம்

எனவே காந்திமார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாநகராட்சி மற்றும் காவல்துறையை கண்டித்து வருகிற 5-ந் தேதி அந்த பகுதியில் சாலையை மறித்து கடைபோடும் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத பட்சத்தில் சாலை மறியல், மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story