மாடுகளுக்கான வண்ணகயிறுகள் விற்பனை மும்முரம்


மாடுகளுக்கான வண்ணகயிறுகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மாடுகளுக்கான வண்ணகயிறுகள் விற்பனை மும்முரம்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. நாளை(திங்கட்கிழமை) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்காக விவசாயிகள், பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். மாட்டுப்பொங்கல் அன்று தாங்கள் வளர்த்து வரும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கழுத்து, மூக்குகளில் புத்தம்புது வண்ண கயிறுகளை அணிவித்து அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி சங்கராபுரம் கடைவீதியில் மாடுகளுக்கு அணிவிப்பதற்காக வண்ண கயிறுகள் மற்றும் கொம்புகளில் பூசுவதற்கான வர்ணங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சங்கராபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வண்ணகயிறுகள், வர்ணங்கள் ஆகியவற்றை வாங்கி செல்கிறார்கள்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, கடந்த 2 வருடங்களாக கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்ததால் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டது. நல்ல மழை பெய்து நெல் அறுவடை செய்து வருகிறோம். இந்த ஆண்டு பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளோம். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிப்பதற்கு தேவையான வண்ணகயிறுகள், வர்ணம், மாலை, பொங்கல் வைப்பதற்கு தேவையான பானை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கிறோம் என்றார். இதேபோல் மூங்கில்துறைப்பட்டிலும் வண்ணகயிறுகள், வர்ணம் போன்றவற்றின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்று வருவதை காண முடிகிறது.


Next Story