பிரசவ வார்டின் மேற்கூரை சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது


பிரசவ வார்டின் மேற்கூரை சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது
x

பிரசவ வார்டின் மேற்கூரை சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டின் மேற்கூரை சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்ததில் பெண் காயம் அடைந்தார். இதனையடுத்து பிரசவ வார்டு வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

பிரசவ வார்டு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்கு வேதாரண்யத்தை அடுத்த தென்னடார் கிராமத்தை சேர்ந்த சசிகலா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இவருக்கு நேற்று ஆண் குழந்ைத பிறந்தது. சசிகலாவுக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த உறவினர் ரேவதி என்பவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

மேற்கூரை சிமெண்டு காைர பெயர்ந்து விழுந்தது

அப்போது வளாகத்தின் மேற்கூரை சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது. இதில் ரேவதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து பிரசவ வார்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

வேறு கட்டிடத்திற்கு மாற்றம்

இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக பிரசவ வார்டு வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது என்றும், சிமெண்டு காரைகள் பெயர்ந்துள்ள பகுதியில் புனரமைப்பு பணி நடைபெறுகிறது என்றும் ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் முருகப்பா தெரிவித்தார்.


Next Story