தியாகதுருகம் அருகே தீவிபத்துகூரை வீடு எரிந்து சாம்பல்ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
தியாகதுருகம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே உள்ள எறஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி அமராவதி (வயது 45). இவர் நேற்று முன்தினம் காலை தனது கூரை வீட்டை பூட்டிவிட்டு 100 வேலை திட்ட பணிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இவருடைய கூரை வீடு திடீரென மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றதுடன், இதுபற்றி உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், அரசு ஆவணங்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story