சுற்றித்திரிந்தவர்களை மீட்ட ரெயில்வே போலீசார்


சுற்றித்திரிந்தவர்களை மீட்ட ரெயில்வே போலீசார்
x

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தவர்களை மீட்ட ரெயில்வே போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

தமிழ்நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் கும்பகோணம் ெரயில் நிலையமும் ஒன்று. கும்பகோணம் ரெயில் நிலையத்தில் ஆதரவற்றோர்கள் சிலர் ரெயில் பயணிகளுக்கும் நடைபாதைகளிலும் நின்று கொண்டு் இடையூறாக ஏற்படுத்துவதாக ெரயில்வே போலீசாருக்குபுகார்கள் வந்தது. இதையடுத்து ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று கும்பகோணத்தில் சுற்றித்திரிந்த சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சேகர் (வயது52), கபிஸ்தலத்தை சண்முக கணேசன் (46), கும்பகோணம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மணியன் (70), கள்ளக்குறிச்சி மாவட்டம் தவிடுப்பட்டை சேர்ந்த ஆறுமுகம் (42) ஆகியோரை மீட்டு உணவுவழங்கி, குடந்தை மாநகராட்சிக்கு சொந்தமான வீடு அற்றோர் தங்கும் விடுதியில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும்,ெரயில் பயணிகளும் போலீசாரை பாராட்டினார்.


Next Story