கரும்பு தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
கொல்லிமலை அடிவாரத்தில் கரும்பு தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது.
நாமக்கல்
சேந்தமங்கலம்
கொல்லிமலை அடிவாரம் செட்டிகுளம் அடிக்கரை பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் நேற்று சுமார் 8 அடி நீளம் கொண்ட ஒரு மலை பாம்பு ஊர்ந்து வந்தது. அதைக் கண்ட அங்கிருந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின்பேரில் நடுக்கோம்பை சேந்தமங்கலம் பிரிவு வனவர் விஜய பாரதி, வனக்காப்பாளர்கள் விஜயகுமார், சரவண பெருமாள் ஆகியோர் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து கொல்லி மலைக்கு செல்லும் 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story