பெரியகுளத்தில் மண் எடுக்கக்கோரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மறியல்


பெரியகுளத்தில் மண் எடுக்கக்கோரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மறியல்
x
தினத்தந்தி 11 May 2023 11:43 PM IST (Updated: 13 May 2023 5:12 PM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு ெபரியகுளத்தில் மண் எடுக்கக்கோரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மறியலில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை

மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. இந்த குளம் 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்தில் கடந்த 15 நாட்களாக அரசு அனுமதியுடன் விவசாய பயன்பாட்டிற்காக மண் அள்ளி வந்தனர். இந்த நிலையில், நேற்று கொத்தமங்கலம் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கொத்தமங்கலம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவரான தி.மு.க.வை சேர்ந்த முத்துத்துரை என்பவர் கொத்தமங்கலம் கிழக்கு பொது அங்காடி அருகில் அரசு பஸ்சை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

28 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளத்தை பலர் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகு எந்த பயன்பாட்டிற்காகவும் மண் அள்ள அனுமதிக்கக் ேவண்டு்ம் எனக் கூறி சாலையில் கட்டிலைப் போட்டு அதில் அமர்ந்தவாறு தனி நபராக சாலை, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அகற்றினர்

இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துத்துரையை குண்டுக்கட்டாக தூக்கி சாலையில் இருந்து அகற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கொத்தமங்கலம்- கீரமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story