காங்கிரஸ் கட்சியினரின் சுவரொட்டியால் பரபரப்பு


காங்கிரஸ் கட்சியினரின் சுவரொட்டியால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Aug 2023 1:30 AM IST (Updated: 24 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல்லில், பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. பா.ஜ.க.வின் ஊழல் பட்டியலை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி. தணிக்கை குழு அறிக்கைகள் எனும் தலைப்பில் சுவரொட்டி உள்ளது. இந்த சுவரொட்டி திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சுவரொட்டிகளை பார்த்த பா.ஜ.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர் அன்புஹரிகரன் தலைமையில் பா.ஜ.க.வினர், திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அதில், பிரதமர் நரேந்திரமோடியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திண்டுக்கல்லில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.


Next Story