பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
மானூரில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
மானூர்:
மானூர் கீழத்தெருவை சேர்ந்தவர் லதா (வயது 50). இவர் மானூரில் கியாஸ் சிலிண்டர் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் மானூரை சேர்ந்த பெல்வின் மற்றும் அவரது உறவினர் குமரி மாவட்டத்தைச் சார்ந்த சுதன் (38) ஆகியோர் கியாஸ் சிலிண்டர்களை மொத்தமாக எடுத்து, வாகனம் மூலம் டெலிவரி செய்து வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் லாப நோக்கில் திருட்டுத்தனமாக கியாஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்தது தெரியவந்தது. இதனை லதா கண்டித்ததுடன், அவர்களை பணியில் இருந்து நீக்கியும் உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதன் மற்றும் பெல்வினின் தந்தை சாலமோன் குமார் (50) ஆகியோர் லதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசியும், கையில் இருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லதா மானூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் வழக்குப்பதிவு செய்து சாலமோன்குமாரை கைது செய்தார். தலைமறைவான சுதனை போலீசார் தேடி வருகின்றனர்.