மூதாட்டி விஷம் குடித்து சாவு


மூதாட்டி விஷம் குடித்து சாவு
x

மானூா் அருகே மூதாட்டி விஷம் குடித்து இறந்தார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள நெல்லை திருத்து என்ற கிராமத்தைச் சேர்ந்த காலாங்கரை கோனார் என்பவருடைய மனைவி சுடலியம்மாள் (வயது 80). இவர் தனது கணவர் இறந்து விட்டதால் மகன் சிவன் பெருமாளுடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல் பலவீனமானதால் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


Next Story