பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பொன்.செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தமிழ்மணியன், பொருளாளர் கணேஷ், செய்தி மற்றும் தகவல் தொடர்பு செயலாளர் கமலகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி உயர்வு, பதவி மாறுதலில் பழைய முறைப்படி 44 ஆண்டுகள் கால அளவில் உள்ளபடி பட்டியலில் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையும் இணைத்து வெளியிட அரசாணையை திருத்தி கொள்ள முடிவை எடுக்க வேண்டும்.
பதவி உயர்வு பெற்ற...
ஆசிரியர்கள், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும். மூத்தோர்-இளையோர் ஊதிய முரண்பாட்டை அரசாணை 25-ன்படி களைந்திட வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியலில் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு அரசு வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை அரசு அனுமதித்து பணப்பலன் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பிரபாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் மணி நன்றி கூறினார்.