நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டின் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இ்ருந்தது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழ் புத்தாண்டின் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இ்ருந்தது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நாகராஜா கோவில்

குமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். சர்ப தோஷம், கிரக தோஷங்கள், திருமணத்தடை உள்ளிட்ட பல்வேறு தோஷங்களை நீக்கும் மிக சிறந்த வழிப்பாட்டு தலமாகும். இதனால் ஞாயிற்றுக்கிழமையன்று நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடியிட்டும் ஆண்களும், பெண்களும் வழிபாடு நடத்துகிறார்கள்.

அதிலும் நேற்று தமிழ் புத்தாண்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, மதுரை மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பம,் குடும்பமாக வந்து நாகராஜரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

பக்தர்களின் நீண்ட வரிசை

கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபட்டனர்.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நேற்று கோவிலில் ஏராளமான புதுமண தம்பதியினரும் வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.


Next Story