தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்


தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்
x
தினத்தந்தி 8 Sept 2023 3:15 AM IST (Updated: 8 Sept 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே வீட்டில் அமைத்திருந்த தகர செட்டில் திடீரென தீப்பிடித்தது. இதில், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே உள்ள மாலையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம். அவருடைய மகன் அஜித் (வயது 23). இவர், நிலக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். அஜித் தனது வீட்டின் அருகில் தகர செட் அமைத்து, அதில் பீரோ, பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் பொருட்களை வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை அந்த செட்டில் திடீரென தீப்பிடித்தது.

இதில், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் பீரோவில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தகர செட்டில் எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து, அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story