மணலிபுதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு


மணலிபுதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு
x

மணலிபுதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்

மீஞ்சூர் அடுத்த மணலிபுதுநகர் அருகே நாப்பாளையம், மணலிபுதுநகர், வெள்ளிவாயல்சாவடி, வீச்சூர் ஆகிய இடங்களில் வழியாக செல்லும் கொசஸ்தலை ஆற்றின் இருபுற கரைகளை சீரமைக்க தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி ரூ.15 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோழவரம், ஆங்காடு, செம்புலிவரம், பாடியநல்லூர் ஆகிய இடங்களில் மழைநீர் சுழ்ந்துள்ள பகுதிகள் மழை நீர் வெளியேறும் நடவடிக்கைகள் ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை உட்பட பல்வேறு துறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட பேரிடர் பார்வையாளர் ராஜாராமன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பொன்னேரி எம்.எல்.ஏ துரைசந்திரசேகர், மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம், ஊரக வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் ரிஷப், பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story