மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றியம், கொன்னையம்பட்டி ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் வெள்ளைக்கண்ணு-ஆண்டிச்சி. இவர்களது வீட்டிற்கு சொத்து பிரச்சினையை காரணம் காட்டி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் வெள்ளைக்கண்ணு குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதாக கூறியும், மீண்டும் மின்சாரம் வழங்ககோரியும் அக்குடும்பத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், காரையூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் தொடங்கி வைத்தார். போராட்டத்தில் வெள்ளைக்கண்ணு குடும்பத்திற்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story