பெண்ணை மிரட்டியவர் கைது


பெண்ணை மிரட்டியவர் கைது
x

முக்கூடலில் பெண்ணை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் சிங்கம்பாறை ரைஸ் மில் வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 32) என்பவரின் கணவருக்கும், இலந்தைகுளத்தை சேர்ந்த செல்வம் (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி வீட்டில் இருந்தபோது அங்கு வந்த செல்வம் அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து மகாலெட்சுமி முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் விசாரணை நடத்தி செல்வத்தை கைது செய்தார்.


Next Story