முதியவரை தாக்கியவர் கைது


முதியவரை தாக்கியவர் கைது
x

முன்னீர்பள்ளம் அருகே முதியவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

முன்னீர்பள்ளத்தை அடுத்த மணலிவிளையை சேர்ந்தவர் துரைசிங் (வயது 59). இவருக்கும், மல்லக்குளத்தை சேர்ந்த ஐசக்சாமுவேல் (36) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துரைசிங் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தபோது அங்கு வந்த ஐசக்சாமுவேல், துரைசிங்கை அவதூறாக பேசி கையால் தாக்கினார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து ஐசக் சாமுவேலை நேற்று கைது செய்தார்.


Next Story