வியாபாரியை தாக்கியவர் கைது


வியாபாரியை தாக்கியவர் கைது
x

நெல்லை அருகே வியாபாரியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி மகன் முருகன் (வயது 43). இவர் தாழையூத்து பஜார் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரிடம் பழம் வாங்க மதவக்குறிச்சியை சேர்ந்த கூலி தொழிலாளியான மற்றொரு முருகன் (40) என்பவர் வந்தார். அவர் பழங்களின் விலையை குறைத்து கேட்டதால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முருகன், பழ வியாபாரி முருகனை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளி முருகனை கைது செய்தார்.


Next Story