ஐஸ் கிரீம் கேட்ட ஜோமோட்டா டெலிவரி ஊழியரை எகிறி வந்து எட்டி உதைத்த நபர்.. தீயாய் பரவும் வீடியோ


ஐஸ் கிரீம் கேட்ட ஜோமோட்டா டெலிவரி  ஊழியரை எகிறி வந்து எட்டி உதைத்த நபர்.. தீயாய் பரவும் வீடியோ
x

ஸ்டீபன்,அங்குள்ள கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

கோவை,

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தற்போது உணவு டெலிவரி நிறுவனங்கள் பெருகிவிட்டன. டிஜிட்டலில் மூழ்கிவிட்ட இன்றைய உலகத்துக்கு இந்த சேவை தேவையானதாக மாறிவிட்டன. இந்தியாவில் ஸ்விக்கி, ஜோமோட்டா நிறுவனங்கள் இந்த சேவையில் முன்னிலை வகிக்கின்றன.

இந்தநிலையில், கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஸ்டீபன், அங்குள்ள கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் ஐஸ்கீரிம் ஆர்டர் செய்துள்ளார். இதனை வாங்குவதற்காக, ஸ்டீபன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்ற போது, கடை உரிமையாளர் அவரை தரக்குறைவாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.


Next Story