மழையால் வீடு இடிந்தது
மழையால் வீடு இடிந்தது
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் தாலுகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பந்தலூர் அருகே எருமாடு கூலால் பகுதியை சேர்ந்த ஜெயமணி என்பவரது வீடு பலத்த மழையால் இடிந்தது. இதை அறிந்ததும் பந்தலூர் தாசில்தார் நடேசன், துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் விஜயன் கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைதலைவர் சந்திரபோஸ் ஆகியோர் விரைந்து வந்து, சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு, வருவாய்த்துறை சார்பில் ரூ.4,500 நிவாரண தொகை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story