இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்


இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
x

நாட்டறம்பள்ளி அருகே இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை 24 வயது வாலிபருக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தோப்பலகுண்டா சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர்கள் வைஜெயந்தி, சாந்தி, தீபா ஆகியோர் கொண்ட குழுவினர் மற்றும் திம்மாம்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் நேற்று மல்லகுண்டா பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தைகள் நலக்குழு மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், போலீசார் பெண் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் திருமணம் நடந்தால் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரை வழங்கினர்.


Next Story