காளைவிடும் திருவிழா
துரிஞ்சாபுரம் கிராமத்தில் காளைவிடும் திருவிழா நடந்தது.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே படவேடு துரிஞ்சாபுரம் கிராமத்தில் இன்று காளைவிடும் திருவிழா நடைபெற்றது.
இதில் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான காளைகள் கொண்டு வரப்பட்டு வீதியில் வேகமாக ஓட விடப்பட்டது.
இதில் வேகமாக ஓடி முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற காளைகளுக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு காளைகளுக்கு 55 பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக காளைகள் ஓடும் வாடிவாசலை படவேடு ரேணுகாம்பாள் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர்.வி.சேகர், ஒன்றிய கவுன்சிலர் மனோகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story