மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்


மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்
x

பெத்தாச்சிகாடு மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

நாகப்பட்டினம்

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பெத்தாச்சிகாட்டில் மண்சாலை உள்ளது. இந்த சாலையை அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். தாணிக்கோட்டகம் செல்வதற்கும் இந்த சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மழைநேரங்களில் சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகட்டூர் பெத்தாச்சிக்காடு மண்சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story