நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவு
நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவு
ஈரோடு
நம்பியூர்
நம்பியூர் பகுதிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சென்றார். அப்போது அவர் பேரூராட்சி பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் வணிகவளம் வளாகம் கட்டு்ம் பணி மற்றும் சந்தை மேம்பாடு பணியை பார்வையிட்டு் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கு நடக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலெக்டருடன் சென்றனர். இதேபோல் ஊராட்சி பகுதிகளான ஆண்டிபாளையம், கடத்தூர் பகுதிகளிலும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story