வேனில் இருந்து கீழே விழுந்த சமையல் மாஸ்டர் சாவு


வேனில் இருந்து கீழே விழுந்த சமையல் மாஸ்டர் சாவு
x

கஸ்தம்பாடி அருகே வேனில் இருந்து கீழே விழுந்த சமையல் மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா குருமுடி தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 63), சமையல் மாஸ்டர். இவருடன் 10 பேர் மினி வேனில் திருவண்ணாமலையில் சமையல் வேலைக்கு சென்றனர். வேலை முடித்துக்கொண்டு வேனில் வீடு திரும்பினா். கஸ்தம்பாடி அருகே வரும் போது வேகத்தடையில் வேன் ஏறி இறங்கிய போது வேனில் இருந்து சுந்தரமூா்த்தி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

உடனே அவா் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிாிழந்தார். இதுகுறித்த புகாாின் பேரில் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்தில் உயிாிழந்த சுந்தரமூர்த்திக்கு அல்லி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story