கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சோனி விதுலா தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ., போலிங் பூத் கமிட்டி மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் மணிகண்டன், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், மண்டல தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 2 கியாஸ் சிலிண்டர்களை ஆர்ப்பாட்டத்தின் முன்பு வைத்து அதற்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
---
Related Tags :
Next Story