குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் நடைபெற்றது.
திருச்சி
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மாகாலனி- அண்ணாநகர் கரை சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நவல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் மல்லிகா தலைமை தாங்கினார். இந்த நிலையில் துறைசார்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் நவல்பட்டு சாலையில் பஸ்களை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story