வீட்டின் மாடியில் இருந்த செல்போன் கோபுரம் மாயம்


வீட்டின் மாடியில் இருந்த செல்போன் கோபுரம் மாயம்
x

வீட்டின் மாடியில் இருந்த செல்போன் கோபுரம் மாயமானது

திருச்சி

திருச்சி காஜாமலை ஜே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). இவர் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 15-12-2008-ம் ஆண்டு திருச்சி சிந்தாமணி பகுதியில் பூசாரி வீதியில் உள்ள கந்தசாமி (69) என்பவரின் வீட்டின் மாடியில் தனியார் நிறுவனத்துக்காக செல்போன் கோபுரம் அமைத்து இருந்தது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் சென்று பார்த்த போது, செல்போன் கோபுரத்தை காணவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் சுரேஷ்குமார் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா, செல்போன் கோபுரம் நிறுவப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரான கந்தசாமி மீது வழக்குப்பதிவு செய்து, செல்போன் கோபுரம் மாயமானது எப்படி என்று விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story