அண்ணாமலைநகரில்ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


அண்ணாமலைநகரில்ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
x

அண்ணாமலைநகரில் ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா நகர் பகுதியில் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றதுடன், இதுபற்றி சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் காரின் உள்பகுதி தீயில் எரிந்து சேதமானது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story