ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு


ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு
x

திருக்காட்டுப்பள்ளி அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் அமைந்துள்ள சுக்காம்பார் கிராமம் கீழ்த் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சஞ்சு (வயது11). இவன் கோவிலடி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். சஞ்சு நேற்று மாலை தனது வீட்டின் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றுள்ளார். பின்னர் அவன் .கொள்ளிடத்தில் ஆற்றில் நீர் தேங்கிய பகுதியில் காலை வைத்த போது தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். அப்போது அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம இளைஞர்கள் அங்கு வந்து ஆற்றில் இறங்கி தேடி சிறுவன் சஞ்சு உடலை மீட்டனர். கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியதால் தான் பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்கி நின்றதாகவும், அந்த பள்ளத்தில் சிறுவன் மூழ்கி இறந்தாகவும் கூறி கிராம மக்கள் சுக்காம்பார் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து தோகூர் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story