மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்-பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
திருச்சி
திருவெறும்பூர் தொகுதி பா.ஜ.க.வின் ஏழு அணிகள் மாநாடு மற்றும் கருத்தரங்கம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜசேகர், மகளிர் அணி மாநில துணை தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில ஓ.பி.சி. அணி தலைவர் சாய் சுரேஷ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இதில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பா.ஜ.க. அரசு 9 ஆண்டுகளாக செய்த சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். மத்திய திட்டங்களை மாநில அரசு தனது திட்டமாக கூறி ஏமாற்றி வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story