மாவட்டத்தில் 2-வது கட்டமாக மகளிர் உரிமைத்திட்டத்துக்கான டோக்கன் வழங்கும் பணி இன்று தொடக்கம்


மாவட்டத்தில் 2-வது கட்டமாக மகளிர் உரிமைத்திட்டத்துக்கான டோக்கன் வழங்கும் பணி இன்று தொடக்கம்
x

ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக மகளிர் உரிமைத்திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் -டோக்கன் வழங்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக மகளிர் உரிமைத்திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் -டோக்கன் வழங்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை

மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தமிழகம் முழுவதும் தொடங்கப்படுகிறது. இதற்காக முதல் கட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி நிறைவடைந்தது. அப்போது விண்ணப்பம் பெறாதவர்கள், வீடு பூட்டி இருந்தது போன்ற காரணத்துக்கான விண்ணப்பங்கள், அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டுதாரர்கள் பெற்று வருகின்றனர்.

முதல் கட்ட விண்ணப்பதாரருக்கு கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை பதிவேற்ற முகாம் நடந்து வருகிறது. இந்த பணியில் இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள் உள்பட வருவாய் துறையினர், கூட்டுறவு உள்ளிட்ட துறையினர் என 3 ஆயிரத்து 177 பேர் ஈடுபட்டுள்ளனர்.

2-ம் கட்ட விண்ணப்பம்

இந்த நிலையில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகிக்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:-

முதல் கட்டமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 352 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்கள் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் வைத்து, ஏற்கனவே பெறாதவர்கள் பெற்று செல்கின்றனர். நாளை (புதன்கிழமை) வரை விண்ணப்பம் பெற்றவர்களுக்கான பதிவேற்ற முகாமும், 3, 4-ந்தேதிகளில் தாமதமாக பெற்றவர்களுக்கான முகாமும் நடக்கிறது.

இதற்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை 2-ம் கட்ட முகாமுக்காக விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வினியோகிக்கப்பட உள்ளது. இதில் 568 ரேஷன் கடைகளை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 544 இடங்களில் பதிவேற்ற முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.


Next Story