பின்னலாடைத்துறையில் புதிய தொழில்முனைவோர்கள் அதிகரிப்பார்கள்


பின்னலாடைத்துறையில் புதிய தொழில்முனைவோர்கள் அதிகரிப்பார்கள்
x

தமிழக கைத்தறி, துணிநூல் துறை அறிவிப்புகளால் பின்னலாடைத்துறையில் புதிய தொழில்முனைவோர்கள் அதிகரிப்பார்கள் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருப்பூர்

தமிழக கைத்தறி, துணிநூல் துறை அறிவிப்புகளால் பின்னலாடைத்துறையில் புதிய தொழில்முனைவோர்கள் அதிகரிப்பார்கள் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வரவேற்பு

தமிழக சட்டசபையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வரவேற்பு தெரிவித்து கூறியதாவது:-

அனைத்து ஜவுளிப்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் ஜவுளி நகரம் பொது-தனியார் பங்களிப்புடன் சென்னையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த ஆண்டும் சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு ரூ.60 லட்சத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் உள்ள 12 தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி சிறப்பு மையங்களால் தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த தொழில்நுட்பங்களை புகுத்தி, தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு மேற்கொள்ளவும், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில் முனைவோருடன் 2 நாள் பயிலரங்கம் ரூ.27 லட்சத்தில் கோவையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி தொழில்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

புதியதொழில் முனைவோர்கள்

தமிழகத்தில் ஜவுளி தொழில் தொடங்க ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகள் வழங்க துணிநூல் துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரத்யேக ஜவுளி தொழில் ஊக்குவிப்பு பிரிவு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக பின்னலாடை துறையில் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக வழிவகுக்கும். தமிழகத்தில் ஜவுளித்தொழில் மேம்படும். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஆர். காந்தி ஆகியோருக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story