செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது.
மார்த்தாண்டம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருதங்கோடு நுள்ளிக்காடு பகுதியில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக செம்மண்ணுடன் ஒரு டெம்போ சென்று கொண்டு இருந்தது. போலீசாரை கண்டதும் டெம்போவை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த டெம்போவை செம்மண்ணுடன் பறிமுதல் செய்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டெம்போ உரிமையாளரான மேல்பாலையை சேர்ந்த சசிகுமார் (42) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story